Friday, December 31, 2010

Religious Harmony

Works on Religious Harmony


“Conquering the human hearts is the real religious harmony” – Yembal Thajammul Mohammad.

The renowned (Islamic) Tamil writer Yembal Thajammul Mohammad is an award winner of Islamic Literary Association for his harmonious works on the bases of Islam.

He wrote and published “Islam Kattum Samaya Nallinakkam (Tamil)” as an authentic work by his research skill on August 1998 as a mark of India’s Golden Jubilee Celebrations of independence. This book was dedicated to non – Muslim brethren. It was well received by the Tamil audience as well as the religious scholars. So it got an immediate success.

Then the English translation of his Tamil original “Religious Harmony – an Islamic Doctrine” was published in millennium 2000. This is the first book in English on religious harmony as envisaged in Islam. It shows through the Holy Quran and Sunnah that Islam never sanctions intolerance and persecutions of other faiths. Thus this book is the right antidote to religious extremism in any form. This book was dedicated in all humility to the great cause of world peace and universal harmony. (This book is an award winner of Islamic Research Centre of Scripture & Culture, Inamkulathur, Trichy)

In September 2005, a research paper on “Quranic View of Other Religions” was presented as lead paper by the author in The All India Seminar on Interpreting the Scriptures, Hermeneutics of Sacred writings organized by The School of Religions, Philosophy & Humanist Thought, Madurai Kamaraj University, under the auspices of DRS – SAP – UCG. Then the research paper published as a book.

So many articles on religious harmony written by the author were published in Tamil magazines and special numbers. His works on this subject became trend-setters in many circles irrespective of religion and being referred widely.

His sincere and serious harmonious works were much appreciated by Arch Bishop M.Arokiasamy, Madurai; Dhavath Thiru Kundrakudi Ponnambala Adigalar ; Dato Sri. Sami Vellu, Minister of Works, Malaysia; Al-Moulvi S. M. Moideen Madani, Representative, Ministry of Islamic Affairs & Guidance, K. S. A; Rev. Father Amudhan Adigal, Prof. K. M. Kadar Mohideen, National Secretary of IUML; Captain N. A. Ameer Ali ; Kavikko Abdul Rahman and many more right thinking scholars.

Before publishing all these books, in 1994, “The Hero as Prophet ( On Heroes and Hero-Worship and the Heroic in History )” by Thomas Carlyle who was a great historian and litterateur – was published in Tamil by the author. This is the very first translation in Tamil. By this, a world classic literature was introduced to the Tamil world with harmonious spirit. The Tamil title of the translation is “Thoodhu Vandha Veerar”.

“Islam and the west” by Prince Charles also translated in the same year by the author in the title of “Islamum Merkku Nadugalum”.

The author is keen about promoting the real religious harmony.

Without religious harmony, we cannot even think a civilized, peaceful world. So we hope that the author like Yembal Thajmmul Mohammad will continue to give many more works as the above mentioned books which will help to further ennoble the minds.

Friday, December 24, 2010

http://myworksonislam.blogspot.com
அல்லாஹ்வின் வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப்(ரலி)
வள்ளல்கள் உலக வரலாற்றில் தனி இடம் பெற்றவர்கள் .அதில் இடம் பெறத்தக்க-ஆனால் நீண்ட காலம் அதில் இடம் பெறாமல் இருந்த- ஒரு தூய வள்ளல் பெருமகனார் அப்துர் ரஹ்மான்.(அன்னாரைப் பற்றிய முழு வரலாற்று நூலை எழுதும் நல்ல வாய்ப்பைப் பெற்றவர்கள் ஏம்பல் தஜம்முல் முஹம்மதும் குவைத் கே.தாஜுத்தீனும்.)இந்த நூல் முஸ்லிம் பணக்காரர்களுக்கு ஒரு முன் மாதிரியைக் காட்டும் நூல்.இந்த நூலைப் படித்து மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் அணிந்துரை அளித்தவர்கள்:மௌலவி முஹம்மது கான் பாக்கவி,டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்&கேப்டன் அமீர் அலி ஆகியோர் ஆவர்.

My Works on Islam-Part 7

9.ஏம்பல் தஜம்முல் முஹம்மதும் குவைத் கே.தாஜுத்தீனும் இணைந்து இதுவரை இரண்டு நூல்களை எழுதி உள்ளனர்.அவை,

.அந்த ஓளி!அந்த வழி!!

.அல்லாஹ்வின் வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப்.

இன்ஷா அல்லாஹ் மேலும் தொடர்ந்து சஹாபா பெருமக்களைப் பற்றி எழுத உள்ளனர்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) என்னும் திருப் பெயருக்குரிய சஹாபியைப் பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்து கி.பி. 2005-வரை எந்த மொழியிலும் ஒரு வரலாற்று நூல்கூட எழுதப் படவில்லை.அன்னாரைப் பற்றி முதன்முதலாக ஒரு முழுமையான நூலை

ஆய்வு செய்து எழுதி வெளியிடும் நல்ல வாய்ப்பினை அல்லாஹ் மேற்கண்ட நூலாசிரியர்கள் இருவருக்கும் அருள் செய்தான்.அல்ஹம்துலில்லாஹ்!


My Works on Islam--Part 6

8.அந்த ஓளி! அந்த வழி !!
அண்ணல் நபி (ஸல்) அவர்களையும் ,அவர்களுடைய திருத் தோழர்களையும் எவ்வாறு அணுகி,எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் ?எவ்வாறு பின்பற்ற வேண்டும்? என்பனவற்றை நடுநிலையான உள்ளம் கொண்ட எவரும் புரிந்து உணரும் வண்ணம் எழுச்சியோடு எடுத்துரைக்கும் அறிய நூல்!
*அண்ணல் நபி (ஸல்) அவர்களைப்பற்றிய அறிமுகமாக இத்தகைய நூல் தமிழில் இதுவரை வந்ததில்லை !இந்த நூலைப் பற்றி .....
"பேரில் உயர்ந்த
பெருமானாரை
நேரில் தரிசிப்பதுபோல்
இருக்கிறது"-என்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான்.
"தமிழ்த் தாழ்வாரங்களில்
ஒவ்வாத பேரையும் ஒவ்வும்படிச் செய்த
நபிகளார் பற்றி
சவ்வாது வரிகளில் பிழிந்துள்ள
சரித்திரச் சாரம்"-என்கிறார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

My works on Islam-Part 5

7.This is a Tamil translation of "Islam and the West".

At first it was a lecture delivered by Prince Charles in England.Then the original version obtained from British High Commission for our translation.This is the very first publication,published in a book form.அந்த நல்லிணக்கக் கண்ணோட்டத்துடன் ஆற்றப்பட்ட இந்த சொற்பொழிவு,அதற்கு ஆதரவாக இஸ்லாம் இருப்பதை விளக்குகிறது.இது ஆங்கில இலக்கிய மேதை தாமஸ் கார்லைல் 160-ஆண்டுகளுக்கு முன்னர் ஆற்றிய பேருரையினை வழி மொழிவதாக இருப்பது வரலாற்று வியப்பாகும்.ஏம்பல் தஜம்முல் முஹம்மதின் இந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு கேப்டன் அமீர் அலி ,பேராசிரியர் காதர் மொஹிதீன் ஆகிய பெருமக்கள் அணிந்துரை அளித்துள்ளனர் .1994-ஆம் ஆண்டு இந்த நூல் வெளியானது.
************************************************************************************






Tuesday, December 14, 2010

My Works on Islam Part-4

இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம் -உண்மையான சமய நல்லிணக்கத்தை எல்லா நிலைகளிலும் நடைமுறைப்படுத்த ,தெள்ளத் தெளிவாக நெறிப்படுத்தும் நூல் .பிற சமயத்தவருக்கு இஸ்லாம் பற்றி இருந்துவரும் தவறான கருத்துகளை போக்கிவரும் நூல்.இஸ்லாம் பற்றிய புதிய புரிதலையும் மதிப்பையும் சகோதர சமயச் சான்றோர்களிடம் ஏற்படுத்திய நூல்.நாட்டின் சுதந்திரப் பொன்விழா ஆண்டுச் சிறப்பு வெளியீடாக சர்வ சமயச் சான்றோர்கள் ஒன்றாக இணைந்து வெளியிட்டுச் சிறப்பித்த நூல்.(1998)
ஆர்ச்பிஷப் ஆரோக்கியசாமி,குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,புரவலர் ஹாஜி ஏ .ஆர்.நூற் முஹம்மத்,ஜே.எஸ்.இராசு,எம்.பி; புலவர் குறளன்பன்,பேராசிரயர் கே.எம்.காதர் மொஹிதீன் ,எம்.பி; முதலியோர் அளித்துள்ள அணிந்துரைகளே நூலின் தனிச் சிறப்பை எடுத்துக்காட்டுவன.

My Works on Islam-3

5.திருக்குர் -ஆனில் பிற சமயம் குறித்த மதிப்பீடுகள் -This research paper on QURANIC VIEW OF OTHER RELIGIONS
was presented as lead paper
by
YEMBAL THAJAMMUL MOHAMMAD
in The All India Seminar on interpreting the Scriptures-Hermeneutics of
SACRED WRITINGS
organised by
The School of Religions,Philosophy&Humanist Thought,
Madurai Kamaraj University,under the auspices of
DRS-SAP-UGC
முனைவர் பீ.மு.அஜ்மல்கான்,அருள் தந்தை அமுதன் அடிகள் ,பேராசிரியர் நவநீதன் (புதுகை மன்னர் கல்லுரி ),கேப்டன் அமீர் அலி ஆகியோர் நூலுக்கு அணிந்துரை நல்கியுள்ளனர்.

My Works on Islam-Part 2.


3.தூது வந்த வீரர் -


The first Tamil translation of "THE HERO AS PROPHET by THOMAS CARLYLE.The ENGLISH original considered as world classic by Oxford University(Permission optained from London Oxford University Press to publish in Tamil)


மூல நூலாசிரியரின் மொழி வளத்திற்கு இணையான தமிழ் மொழிபெயர்ப்பு .நூலை என்றும் பயனுடையதாக ஆக்கும் ஏராளமான அடிக்குறிப்புகள் ,விளக்கங்கள் மற்றும் சான்றுகளுடன் பதிப்பிக்கப் பட்டுள்ள நூல்.


1994 ஜூலையில் வெளிவந்த இந்த நூலுக்கு இஸ்லாமிய வரலாறுதனை சிறப்புப் பாடமாகப் படித்த சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் எம்.;எம்.பி;அவர்கள் ,ஜே.எஸ்.இராசு ,பி.;பி.எட்;எம்.பி;அவர்கள் ஆகியோர் அணிந்துரை வழங்கியுள்ளனர்.


-------------------------------------------------------------------------------------------------


4.நிழலில்லாத சூரியன் -இந்த நூலில் கவிதைகள் ,பாடல்கள்,கவியரங்கக் கவிதைகள் ஆகியவைஇடம் பெற்றுள்ளன.தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்களின் விரிவான ஆய்வுரை இந்த நூலுக்கு அணி சேர்ப்பதாக அமைந்துள்ளது.




My Works on Islam-2

.

Monday, November 15, 2010

2. RELIGIOUS HARMONY - An Islamic Doctrine

  • This book was published by Mr.Rahmankhan (Honorable Deputy Speaker of Rajya Saba)
in Chennai.
  • It was awarded in the presence of E.Ahamed (Honaorable State Minister of Railway& NationalPresident of I.U.M.L.) and Prof.K.M.Kader Mohideen(Ex.M.P.&National Secretary of
    I.U.M.L)

  • by ISLAMIC RESEARCH INSTITUTE OF SCRIPTURE&CULTURE,Inamkulathur,Trichy
  • Written appreciations given by The Most Rev.M.Arokiasamy,Arch Bishop of Madurai;
  • Dato Seri S.Samy Vellu,Minister of Works,Malaya;
  • Al-Moulvi Md.Mohideen,Ministry of Islamic Affairs,K.S.A;
  • Prof.K.M.Kader Mohideen,Ex.M.P.&
  • Al-Haj M.Abdur Rahman,M.P.
  • ----------------------------------------------------------------------------------------------
  • With the help of theright-thinking people,our book RELIGIOUS HARMONY-An Islamic doctrine may be introduced to 1.The governments,2.Heads of the state,3.Religious heads,4.Religious depatments of the governments,5.Educational Institutions,6.Local libraries,7.English book-sellers,8.the Mass media,9.the Embassies of theIslamic &Non-Islamic countries &International institutions like UNO&UNESCO inorder toprobagate and popularise the message of PEACE & HARMONEY in this world:
  • Institutions like FAHI-KHAIR,B.H.Many thosand copies of "THE CHOICE"by Ahmed Deedat were brought out by FAHIL-KHAIR.

Monday, November 8, 2010

வீரம் செறிந்த இஸ்லாம்

பத்திரிகைகளின் பாராட்டு - வீரம் செறிந்த இஸ்லாம்

* ஒரேசமயத்தில் தமிழுக்கும் இஸ்லாத்திற்கும் செய்யப்பட பெரும் தொண்டு இது - சமரசம் மாதமிருமுறை

* இஸ்லாமிய பெரியோர்கள் நடத்திய வீரப்போர்கள் பற்றிய விரிவான விவரங்கள் இந்த நூலில் தொகுக்கபட்டுள்ளன. நூலாசிரியர் கவிஞர் ஆகவும் இருப்பதால் அழகான கவிதை நடையில் எழுதப்பட்டு உள்ளது. - தினத்தந்தி - நாளிதழ்

* இஸ்லாத்தை வளர்ப்பதற்கு நடந்த வீரப் போராட்டங்களை சரித்திரப் பூர்வமாக சொல்கிறது - குமுதம் வாரஇதழ்

* எழுத்துலகில் இது நல்ல சாதனை ! தமிழ் அறிவுலகுக்கு நல்லதோர் பரிசு ! புத்தகத்தின் மதிப்பையும் விலையையும் ஒப்பிடும்போது இது ஒரு மலிவுப்பதிப்பு -மறுமலர்ச்சி வாரஇதழ்

* வீரம் செறிந்த எழுத்தில் ,வீரம் செறிந்த உணர்வில் ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்களிடம் இருந்து வெளிப்பட்ட நூல் வீரம் செறிந்த இஸ்லாம் .வீரத்தைப் போலவே வலுவான நூல்.ஒரு கவிஞராகவும் நூலாசிரியர் இருப்பதால் தமிழ் துள்ளி விளையாடுகிறது, நூல் முழுக்க.
-முஸ்லிம் முரசு ,மாத இதழ் .

* ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்களிடம் இருந்து தமிழ் மக்கள் மேலும் பல அபூர்வமான படைப்புகளை எதிர்பார்க்கும் அளவிற்கு கருத்துமிக்கதாக அமைந்துள்ளது ,இந்த நூல்.

* வாள்கொண்டு அச்சுறுத்திப் பரவியதல்ல இஸ்லாம் என்பதற்கு எடுத்துக்காட்டான இந்த நூல், ஒருவர் மற்றொருவருக்குப் பரிசாக வாங்கிக் கொடுத்து இறும்பூது எய்தத்தக்க்து என்றால் அது மிகையல்ல.- இஸ்மி ,வக்ப் வாரிய மாத இதழ் .

* வரலாற்றை ஆய்வுசெய்ய விரும்பும் வல்லுனர்களுக்கும் ,முஸ்லிம்களின் முன் மாதிரிகளைப் புரிந்துகொள்ள விரும்புவோர்க்கும் இந்த நூல் அறிவுக்களஞ்சியம் ஆகும் -முஸ்லிம் குரல் ,மாத இதழ் .

* இந்த நூலின் அருமை பெருமைகளை விளக்கவும் முடியுமோ ! -நர்கிஸ்,மாத இதழ் .

* இந்த நூல் ஆயிரம் ஆண்டுகாலப் பொக்கிஷத்தை நம் கையில் தந்திருக்கிறது - ஜமாத்துல் உலமா ,மாத இதழ் .

=========================================================

வீரம் செறிந்த இஸ்லாம் -ஓர் ஆழ்ந்த பார்வை

அல்லாஹ்வின் பேருதவியினால் பன்னூலாசிரியர் கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்கள் எழுதிய 'வீரம் செறிந்த இஸ்லாம்'எனும் நூலைப்பற்றி உரிய முறையில் அறிய வேண்டுமானால் ,வீரம் குறித்து உலக வரலாறு செய்து வைத்திருக்கும் பதிவுகளில் பார்வையை செலுத்துவது அவசியம்.
வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ள வீரயுகங்களில் (ஹீரோயக் தீட்ஸ்) மெசபடோமியாவில் நிகழ்ந்த சுமேரிய வீர யுகம் கி.மு. 3000 ஆண்டு பழமையானது.கீர்திப்பிரதாபம் மிக்க கிரேக்க நாட்டின் வீரயுகம் கி.மு. மூவாயிரம் ஆண்டு கள் பழமையானது.புலவர் பாடிய புகழுக்குரிய பழந்தமிழர் வீரயுகம் கி.மு.700ஆம் ஆண்டு வாக்கில் எழுந்தது. மிகவும் பிற்காலத்தது ஆன பிரிட்டிஷ் வீரயுகம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் சிறந்திருந்தது.

பொதுவாகவும் மிகுதியாகவும் வீரத்தின் புற நிலைப் பண்புகளையே முன்னிறுத்தி வரலாற்றில் புகழ் பெற்றிருந்த கால கட்டங்களைப் பற்றிக் கூறும் ஆய்வுகளில் ஏனோ அரபு நாட்டின் வீரயுகம் பற்றி இடம் பெறவில்லை.

ஈராயிரம் ஆண்டுப்பழமையான தாக எண்ணப்படும் 'ஒல்காப் புகழுடைய தொல்காப்பியம்',
"கல்வி ,தறுகண் ,இசைமை,கொடைஎனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே "
என்று வகுத்தளித்த இலக்கணமே புறநிலைப் பண்புகளுடன் மட்டுமின்றி வீரத்தை (பெருமிதத்தை) அக நிலைப் பண்புகளுடனும் தொடர்புபடுத்தி ஓர் அருமையான புதிய கண்ணோட்டத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் பணிபுரிந்த பேராசிரியர் பிலிப் கே.ஹிட்டி, 1927 முதல் 1937 வரையில் பெரிதும் உழைத்து எழுதிய "ஹிஸ்டரி ஆப் அராப்ஸ் "எனும் நூலில் (பக்கம் 142) "அரேபியா தரணியை வெல்லும் முன் தன்னை வல்லவேண்டி இருந்தது"என்று கூறியதன் மூலம் வீரத்தின் அகநிலைப் பண்புகளில் ஒன்றான "தன்னை வெல்லும் வீரம்"தரக்கூடிய வெற்றியை மிகவும் அழகாகக் கூறியுள்ளார் என்றாலும் ,அது இஸ்லாம் எனும் மார்க்கம் அளித்த மாண்பு என்பதை அவர் சிறப்பித்துக் கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
பொதுவாக உலக வரலாறு வியந்துரைக்கும் வீரமெல்லாம் ஒரு கால கட்டத்திற்கு உரியதாக ,ஏதேனும் ஓர் இன,நில,மொழி மக்களுக்கு உரியதாக,காலப்போக்கில் கடந்த கால வரலாறாக இருப்பது கண்கூடு.அவ்வக் கால கட்டங்களில் -வீரயுகங்களில் -தோன்றிய வீரநிலை இலக்கியங்கள் பெரும்பாலும் போர்க்கள வெற்றி முதலான புறநிலைப் பண்புகளையே -போற்றுகின்றன.பரணி இலக்கியங்களின் பாதையும் இதுதான்.
ரியாதில் உள்ள சவூதி அரசர் பல்கலைக் கழகம்கூட செப்டம்பர் 2000-இல் தான் வீரத்தின் அகநிலைப் பண்புகளை ஆன்மீகக் கண்ணோட்டத்தோடு அடிக்கோடிட்டுக் காட்டுகிற "ஹீரோஸ் ஆப் இஸ்லாம்"என்னும் நூலை முதன்முதலில் வெளியிட்டுள்ளது .

இதில் சொல்லப்பட்டுள்ள வீரர்களின் வாழ்வைப் பற்றி மட்டுமின்றி சொல்லப்படாத வீரர்களின் வாழ்வையும் கூட ஆராய்ந்து ,1987 -ஆம் ஆண்டிலேயே ஏம்பல் தஜம்முல் முஹம்மது எழுதி முடித்த அருமையும் புதுமையும் உள்ள நூல்தான் "வீரம் செறிந்த இஸ்லாம்!".

வீரத்தின் பல புறநிலைப் பண்புகளையும் ஒருங்கே புலப்படுத்துகிற ஆன்மீக வீரம் ,இன நில மொழி முதலான எல்லா எல்லைகளையும் கடந்து மானுடத்தின் மத்தியில் ஓர் இலட்சியம் ஏற்படுத்துகிற வீரம் ,அதுவும் யுகம் யுகமாகத் தொடரும் வீரம் ,நம்பும் தனிமனிதனுக்கும் அந்த நம்பிக்கையின்படி நடக்கும் சமுதாயத்திற்கும் குன்றாத வீரத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கும் வீரம் என்று ஒன்று உண்டு .அதுதான் "இஸ்லாத்தின் வீரம்"என்று முழங்கி,ஆழ்ந்த சிந்தனையோடு வெளியான நூல்தான் வீரம் செறிந்த இஸ்லாம்!

பல்வேறு பத்திரிகைகள் வியந்து பாராட்டிய நூல்."ஒரே சமயத்தில் இஸ்லாத்திற்கும் தமிழுக்கும் செய்யப்பட பெரும் தொண்டு இது "என்பது அந்த பாராட்டுக்களில் ஒன்று .

"வீரம் செறிந்த இஸ்லாம்"வெளிவந்தபோது ஓர் அமைதிப்புரட்சியைத் தொடக்கிவைத்தது. ஆம்!அதைப் படித்த பின்னர் இறைவன் அருளால் சிந்தனை மாற்றம் பெற்றவர்கள் உண்டு .அது தமிழறிந்த எவருக்கும் இஸ்லாம் மார்கத்தை எத்தி வைக்கும் உத்திக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக இருந்து வருகிறது; இன்ஷா அல்லாஹ் என்றும் இருந்துவரும்.அது செய்திகளைச் சமர்ப்பிக்கும் விதம் பலராலும் பின்பற்றப்படுகிறது.இப்படிப் பற்ப்பல சிறப்புகளைப் பெற்றுள்ள இந்த நூலுக்கு இது ஒரு பதச் சோறுதான்.எல்லாப் புகழும் இறைவனுக்கே!- Izzath.


Enhanced by Zemanta